நடிகர்கள் டைம் பாஸ்..சுக்காக அரசியலுக்கு வருகிறார்கள்
முன்னணி நடிகையாக இருந்த ரோஜா அரசியலில் பிஸி..யாக இருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தின் மந்திரியாக தற்போது இருக்கிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ரோஜா சிலர் டைம்பாஸிற்காக அரசியலுக்கு வருகிறார்கள்.
ஒரு நாள் ஷூட்டிங் மறுநாள் ஆன்மீக பயணம் என பவன் கல்யாண் இருக்கிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் வரும் பொழுது நல்ல எண்ணத்துடன் வரவேண்டும் ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கி திடிரென்று அதை கொண்டு போய் காங்கிரஸில் இணைத்து விட்டார் அவரை நம்பி வந்தவர்கள் இப்போது நடுரோட்டில் நிற்கிறார்கள்.
ரஜினி கூட காட்சி ஆரம்பிக்க போவதாக பூச்சாண்டி காட்டிட்டு போய்ட்டார் அவர சொல்ல மறந்துடிங்கள்ளே. விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் எம்ஜிஆர் ஜெயலலிதா மாதிரி இருக்க வேண்டும். இப்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் டைம்பாஸ்..க்காக அரசியலுக்கு வருகிறார்கள்.
விஜய் அப்படி இருக்கக் கூடாது தனக்கு பின்னால் இருக்கும் மக்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் போராட தயாராக இருக்க வேண்டும். தொண்டர்களை பாதையில் விட்டுவிட்டு செல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார்.


