நீர்வீழ்ச்சியில் நடிகரின் உடல் சடலமாக மீட்பு
பிரபல நடிகரின் உடல் சடலமாக மீட்பு. ஃபேமிலி மேன் 1, 2. 3, வெப் சீரியஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோகித் பாஸ்ஃபோர்(Rohit Basfore).
ரோகித் தனது நண்பர்களுடன் கற்பங்கா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற போது நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் ரோகித் உடலை மீட்டு நேற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் உடலின் பல இடங்களில் காயம் இருப்பதாக தெரிய வந்தது. இவரின் மறைவு குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர் போலிசார்.
ரோகித்தின் மறைவில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ரோகித் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக கூறப்படுகிறது ஆனால் அவர் உடம்பில் பல இடங்களில் காயம் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் ரோகித்தை நண்பர்கள் திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டி உள்ளனர் .
மூன்று நாட்களுக்கு முன்பு பார்கிங் தொடர்பாக சண்டை ஏற்பட்டபோது உன்னை கொலை செய்து விடுவோம் என்று மூன்று பேரும் மிரட்டினார்கள் அதன் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றாக சுற்றுலா செல்ல திட்டமிட்டனர் .
அப்பொழுது கூட ரோஹித் வரவில்லை என்று சொன்னார் ஜிம் பயிற்சியாளர் அமர் தீப் அவனை வற்புறுத்தி அழைத்துச் சென்றார். இந்த சதியில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் ரஞ்சித், அசோக், மற்றும் தர்மா பாஸ்ஃபோர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டனர்.