நடிகர் சங்கம், ஐகோர்ட்டில் அதிரடித் தகவல்! விஷாலின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்துல எப்போவுமே ஏதாச்சும் ஒரு பஞ்சாயத்து ஓடிக்கிட்டே இருக்கும். இப்போ அந்த வரிசையில ‘தேர்தல்’ விவகாரம் மறுபடியும் கோர்ட் படி ஏறியிருக்கு.நடிகர் சங்க சட்டப்படி 3 வருஷத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தணும். கடைசியா 2022-ல நடந்த தேர்தல்ல தான் நாசர் தலைவராவும், விஷால் பொதுச் செயலாளராவும், கார்த்தி பொருளாளராவும் ஜெயிச்சாங்க. இவங்களோட பதவிக்காலம் இந்த 2025 மார்ச் மாசத்தோட முடிஞ்சுடுச்சு. ஆனா, சங்கத்தோட பொதுக்குழு கூட்டத்துல பேசி, இவங்களோட பதவிக்காலத்தை இன்னும் 3 வருஷத்துக்கு (அதாவது 2028 வரைக்கும்) நீட்டிச்சு ஒரு தீர்மானம் போட்டிருக்காங்க.
“தேர்தல் நடத்தாம எப்படி பதவியை நீட்டிக்கலாம்? அந்தத் தீர்மானம் செல்லாது!”னு சொல்லி நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை ஐகோர்ட்ல ஒரு கேஸ் போட்டிருக்காரு. “ஓய்வுபெற்ற நீதிபதியை வச்சு உடனே தேர்தலை நடத்தணும்”ங்கிறது தான் அவரோட கோரிக்கை..
இந்த கேஸ் நீதிபதி மரியா கிளாட் முன்னாடி விசாரணைக்கு வந்தது. அப்போ நடிகர் சங்கம் தரப்புல, “நாங்க பதவியை நீட்டிச்சதை சங்கங்களின் பதிவாளர் (Registrar) ஏத்துக்கிட்டாரு”னு ஒரு பாயிண்ட்டைச் சொன்னாங்க. இதைக் கேட்ட நீதிபதி, “சரி, இது சம்பந்தமா நடிகர் சங்கம் பதிலளிக்கணும்”னு உத்தரவிட்டு, கேஸை வர்ற மார்ச் 24-ஆம் தேதிக்கு தள்ளி வச்சிருக்காரு. அன்னைக்கு தான் தெரியப்போகுது.. விஷால், நாசர் டீம் பதவியில நீடிப்பாங்களா? இல்ல உடனே தேர்தல் வருமான்னு!


