முன்னாள் பிரதமர்களை அவமதித்து பதிவினை வெளியிட்ட நடிகர் விநாயகன்
மறைந்த முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவைத் தொடர்ந்து, நடிகர் விநாயகன், மஹத்மா காந்தி மற்றும் பிறரைப் பற்றி சமூக ஊடகப் பதிவில் அவமதிக்கும் கருத்துக்களைத் தெரிவித்ததாக இளைஞர் காங்கிரஸ் (ஒய்.சி.) குற்றம் சாட்டியுள்ளது.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் ஜூலை 21 அன்று திருவனந்தபுரத்தில் தனது 101வது வயதில் இறந்தார்.
புதன்கிழமை கொச்சியில் நடந்த இரங்கல் பேரணியில் விநாயகன் பங்கேற்று திரு. அச்சுதானந்தனைப் புகழ்ந்து பேசினார்… அதனை தொடர்ந்து பேஸ்புக்..கில் தனது நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படத்துடன் ஒரு பதிவினை வெளியிட்டார்.
ஒய்.சி. எர்ணாகுளம் மாவட்டத் தலைவர் சிஜோ ஜோசப் அளித்த புகாரில். விநாயகனின் பேஸ்புக் பதிவு மிகவும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், வாசகர்களின் மனசாட்சியைப் புண்படுத்துவதாகவும் சிஜோ குற்றம் சாட்டினார்.
அதில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரை அவமதிக்கும் வகையில் குறிப்புகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


