in

நடிகர் ஸ்ரீகாந்த் கைது எதிரொலி…. பல முன்னணி நடிகர்கள் சிக்க வாய்ப்பு

நடிகர் ஸ்ரீகாந்த் கைது எதிரொலி…. பல முன்னணி நடிகர்கள் சிக்க வாய்ப்பு

 

நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் தனக்கு போதை பொருள் பழக்கம் எப்படி வந்தது என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீ காந்திற்கு சரியான சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கடன் பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது அந்த சந்தர்ப்பத்தில் படஅதிபர் பிரசாந்துடன் பழக்கம் ஏற்பட்டு அவரது தயாரிப்பில் தீங்கீரை என்ற படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்தார்.

அந்த படத்தில் நடித்ததற்காக அவர் எனக்கு 10 லட்ச ரூபாய் பாக்கி பணம் தர வேண்டியது இருந்தது அதற்கு பதிலாக கொக்கைன் போதை பொருளை எனக்கு கொடுத்தார்.

அதிலிருந்து தான் எனக்கு போதை பொருள் பழக்கம் ஏற்பட்டது. எனது மன அழுத்தத்தை போக்க நான் வீட்டில் இருந்தே பயன்படுத்தினேன் போதை பொருள் கும்பலை சேர்ந்த ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவரிடம் ஆன்லைன் மூலம் நான் போதை பொருள் வாங்கினேன் தற்பொழுது சினிமாவில் நடக்கும் விருந்து நிகழ்வுகளில் எல்லாம் போதை பொருள் தாராளமாக வழங்கப்படுகிறது. இது தவறு என்று எனக்கு தெரியும் தப்பு செய்துவிட்டேன் என்று கண்கலங்கி கூறினார்.

எனது மகன் மற்றும் மகள் பள்ளியில் படிக்கிறார்கள் எனது தவறால் அவர்கள் வாழ்க்கையும் பாழாகிவிடும் என்று அஞ்சுகிறேன் என் மகன் என்னை பிரிந்து இருக்க மாட்டான் என்று வாக்குமூலம் அளித்தார்.

ஸ்ரீகாந்தின் கைதி நடவடிக்கையை முன்னிட்டு ஏற்படுத்திய விசாரணையில் அவரது நண்பரான தொழிலதிபர் அஜய் வாண்டை யாரும் போதை பொருள் கடத்தல் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

அவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் பல திரை பிரபலங்களும் இதில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறையில் இருக்கும் ஸ்ரீகாந்த் சிறையில் கொடுக்கப்பட்ட உணவை நேற்று சாப்பிட்டார்.

முதல் வகுப்பில் இருக்கும் அவருக்கு காலை செய்தித்தாள் வழங்கப்பட்டது. தான் கைது செய்யப்பட்டதை பத்திரிக்கையில் படித்து தன்னை யாராவது பார்க்க வந்து உள்ளார்களா என்று சிறை அதிகாரியிடம் கேட்டார். அவரது குடும்பத்தினரோ அல்லது வக்கீலோ யாவரும் அவரை பார்க்க வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

What do you think?

சிகப்பு ரோஜாக்கள் சினிமா போல், திரில்லிங்காக இருக்கும் மார்க்கன் சினிமா.

விசாரனைக்கு பயந்து தலைமறைவான நடிகர் கிருஷ்ணா