in

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

 

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தரிசனம்…

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை, பிரசாதங்கள் வழங்கப்பட்டது…

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார்.

முன்னதாக சம்பந்த விநாயகர் சன்னதி அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். பின்னர் அம்மன் சன்னிதானத்தில் உள்ள நவகிரகங்கள் மற்றும் சித்தர குப்தர்களை வணங்கி வழிபட்டார்.

பின்னர் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் அவரது ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

What do you think?

மகா சிவராத்தியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

அண்ணாமலையார் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்