ஜனநாயகன் படம் விரைவில் வெளிவரும் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார் சுவாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்
அடுத்த படம் கூடிய விரைவில் தெரிவிப்பேன் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

வேண்டுதல் வந்து வேறு வேண்டுதலுக்காக குடும்பத்துடன் வந்திருக்கிறேன்14 ஆண்டுகள் நிறைவு என்பது அனைவரும் செலிப்ரேட் செய்கிறார்கள்
ஒவ்வொரு வருடம் கூடும்பொழுது பொறுப்பு தான் அதிகமாகி கொண்டு இருக்கிறது.
நிறைய கஷ்டங்கள் போராட்டங்கள் இருக்கும் அதையும் தாண்டி மக்கள் கொடுத்த அன்பு மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என கூறிய சிவகார்த்திகேயன்.
இன்னும் உழைக்கணும்னு தோணுது அடுத்து ஒரு படம் லாக் செய்து அதற்கான டைரக்டர் ப்ரொடியூசர் தயாராக இருக்கிறார்கள்.
விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் எல்லோரும் எந்த மாதிரியான படம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அந்த மாதிரி படம் நிச்சயமாக இருக்கும் எல்லாருக்கும்.
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் ரசிக்கின்ற மாதிரி படங்களாக இருக்கும் எனக் கூறினார்.
விஜய் நடித்து வெளியாகாமல் இருக்கின்ற ஜனநாயகன் படம் எப்பொழுது வெளியாகும் என்று கேட்ட பொழுது சிரித்துக்கொண்டே விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

