நடிகர் ரிஷப் ஷெட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டி.
‘காந்தாரா’ திரைப்படக் கதாநாயகர் ரிஷப் ஷெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின் மூலம் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்துக்குப் பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்தம், பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் புகைப்படம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டினர்.


