தஞ்சையில் புதிய நகைக்கடையை திறந்து வைத்தார் நடிகர் ரவி மோகன்..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூடி பிடித்து வரும் நிலையில்,
மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது.. நீ..தொழிலுக்காக அரசியல் பண்றவன்.
நான் அரசியலே தொழிலா பண்றவன்- என தஞ்சையில் புதிய நகைக்கடையை திறந்து வைத்து நடிகர் ரவி மோகன் அடித்த பஞ்ச் டையலாக் அடித்தார்.
தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இன்று தனியார் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது.

நகைக் கடையை நடிகர் ரவி மோகன் திறந்து வைத்து ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்து உரையாடினார்.
அப்போது பேசி அவர்” பொன்னியின் செல்வன் படத்தில் என்னை இராஜராஜ சோழனாக ஏற்றுக்கொண்ட தஞ்சை மக்களுக்கு நன்றி.
என கூறிவிட்டு, ரசிகர்கள் ஏதாவது டயலாக் பேசும்படி கேட்டபோது’ அவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்ற, மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது, என்ற வசனத்தையும், கராத்தே பாபு படத்தில் இடம்பெற்ற.
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலை தொழிலா பண்றவன்.என பஞ்ச் டயலாக் அடித்தார்.


