புதிதாக மருத்துவமனை கட்டும் நடிகர் நெப்போலியன்
தசைஅயற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெப்போலியன் மகன் தனுஷுக்கு கடந்த ஆண்டு ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார்.
தன் மகனைப் போல் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இலவசமாக மருத்துவம் கொடுப்பதற்காக திருநெல்வேலியில் ஒரு மருத்துவமனையைக் கட்டி இருக்கிறார்.
ஜீவன் அறக்கட்டளை அமைப்பையும் நடத்தி வருகிறார். நெப்போலியன் நண்பரான ஜீவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெப்போலியன் புதிதாக தொடங்கி இருக்கும் மயோபதி மருத்துவமனையின் பூஜை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
நெப்போலியன் தொடங்கி இருக்கும் இந்த மருத்துவமனையால் பல குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சைகள் கொடுக்கப்படும் இவரின் இந்த செயலை பாராட்டி அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.