சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், மலையாளப் படமான ‘துடக்கம்’ மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார்.
ஜூட் அந்தனி ஜோசப் இயக்கவுள்ளார்.
ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிக்கிறது. படத்தை அறிவித்து மோகன்லால், சமூக ஊடகங்களில், “அன்புள்ள மாயாக்குட்டி, உங்கள் ‘துடக்கம்’ சினிமாவுடனான வாழ்நாள் காதலின் முதல் படியாக இந்த படம் இருக்கட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லாலும் தனது சகோதரி விஸ்மயாவை சினிமா உலகில் வரவேற்க. படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, “என் சகோதரி சினிமா உலகில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார்.
இந்தப் பயணத்தில் அவர் செல்வதால் நம்பமுடியாத அளவிற்கு பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது!” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், படத்தின் இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் சமூக ஊடகங்களில், “இதை நான் ஒரு அழைப்பாகப் பார்க்கிறேன். என் அன்பான லாலேட்டனும் சுசிச்சேச்சியும் தங்கள் அன்புக்குரிய மாயாவின் முதல் படத்தை என்னிடம் ஒப்படைத்தபோது, அவர்களின் கண்கலில் நிறைந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் நான் கண்டேன்.
லாலேட்டன், சேச்சி, நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். இது ஒரு சிறிய, எளிமையான படம். நான் எப்போதும் என் இதயத்தைத் தொடும் படங்களை மட்டுமே தயாரித்துள்ளேன், என்று பதிவிட்டுள்ளார்.


