சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் ஜெயராமன் சுவாமி தரிசனம்
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில்நடிகர் ஜெயராமன் அவரது மனைவியுடன் சுவாமி தரிசனம், ரசிகர்கள் பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஐயப்பன் கோவில் துவார பாலகர் சம்பந்தமான கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சிரித்தபடி சென்றார்.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் முன்னணி நடிகராகவும் தற்போது நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவோருமான ஜெயராமன் அவரது மனைவியுடன் உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
அவருக்கு கோவில் தீட்சிதர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டு நடராஜர் சன்னதி முன்பு உள்ள கனக சபை மீது ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வைத்தனர், பின்னர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவிக்கு பிரசாதம் வழங்கினர்.
நடராஜர் சன்னதியை நடிகர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சுற்றி வந்து கோவிலை விட்டு வெளியே வந்த போது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தனியார் ஹோட்டலுக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.
எனது தாயின் ஊர் கும்பகோணம் அப்பா பாலக்காடு சின்ன வயதில் பிறந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் தான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். பின்னர் வர வாய்ப்பு இல்லை
கடவுள் புண்ணியத்தில் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வர முடிந்தது.
சின்ன வயதில் கும்பகோணத்தில் நிறைய நேரம் செலவழித்த கும்பேஸ்வரன் கோவில் வாசல், சாரங்கபாணி கோவில் வாசலில் தான், எனது திருமணம் முடிந்த பின்பு அந்த கோவில்களை சுற்றி காண்பிக்க முடியவில்லை தற்போது கும்பகோணம் செல்ல உள்ளோம்.
தற்போது தமிழில் தனுஷ் உடன் படப்பிடிப்பில் இருப்பதாகவும் நானும் ஊர்வசியும் ரொம்ப வருஷத்துக்கு பிறகு சேர்ந்து நடிக்கக்கூடிய படம் ஒன்று நடித்துக் கொண்டிருக்கிறேன்.

தெலுங்கில் மூன்று படங்கள் நடித்து வருகிறேன் அதேபோல் கன்னடத்தில் சிவராஜ் சாறுடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதேபோல் மலையாளத்தில் நடித்து வருகிறேன் எல்லா படங்களும் நல்லபடியாக செல்கிறது என தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேரளா ஐயப்பன் கோவில் துவார பாலகர் தங்கம் சம்பந்தமான கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சிரித்தபடி சென்றார்.


