in

சின்னத்திரை தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக பொறுப்பேற்ற நடிகர் பரத்

சின்னத்திரை தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக பொறுப்பேற்ற நடிகர் பரத்


Watch – YouTube Click

 

சின்னத்திரை நடிகர்களுக்கான தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக சிவன் சீனிவாசன் பொது செயலராக போஸ் வெங்கட்டும் பதவி வகித்த நிலையில் அவர்களது பதவிக்காலம் முடிவுறும் நிலையில் ஜூலை மாதம் 22ம் தேதி தலைவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சீனிவாசன் தலைமையிலான வசந்தம் அணி, நடிகர் தினேஷ் தலைமையிலான உழைக்கும் கரங்கள் அணி நடிகர் பரத்தின் வெற்றி அணி என்று மூன்று அணிகளுடன் கணேஷ் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் புரட்சி படை என சுயேட்சியாக போட்டியிட்டனர்.

பொதுச் செயலாளர் பதவியைத் தவிர, இரண்டு துணை தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள் 14 கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

பெப்சியின் முன்னாள் தலைவரான உமாசங்கர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று தேர்தலை நடத்தினார்.

நேற்று காலை முதலே நடிகர் நடிகைகள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். மூத்த சின்னத்திரை நடிகர்களும் வாக்களித்தனர்.

நேற்று இரவு 10 மணிக்கு தேர்தல் முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. 491 வாக்குகள் பெற்று வெற்றி அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் பரத் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.

What do you think?

புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா முத்துமணிச் சிவிகை

தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்திற்கு கூலி திரைப்படத்தன்று விடுமுறை