in

ரசிகர்களுக்கு நன்றி அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜித் குமார்

ரசிகர்களுக்கு நன்றி அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜித் குமார்


Watch – YouTube Click

 

சினிமா துறையில்…33 ஆண்டுகளை கடந்த நடிகர் அஜித்குமார்….. கடினமான காலங்களில் என்னுடன் இருந்த ரசிகர்களுக்கு நன்றி

நடிகர் அஜித் குமார், திரையுலகில் 33 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு, சினிமா பின்புலம் இல்லாமல் தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராகவும், பத்ம பூஷண் விருது பெற்றவராகவும் மாறிய தனது பயணத்தை நினைவுகூர்ந்து வெளியிட்ட தனது நன்றி அறிக்கையில், தனது மைல்கல் கொண்டாட்டம் பற்றியது அல்ல, நன்றியுணர்வு பற்றியது.

“சினிமா என்ற இந்த அசாதாரண பயணத்தில் நான் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன், கொண்டாடுவதற்காக இதை நான் எழுதவில்லை.

கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மைல்கல் என்று நான் நம்புவதால். உங்கள் அனைவருக்கும் முழு மனதுடனும் கைகளைக் கூப்பி நன்றி கூறுகிறேன்,” என்று அவர் எழுதினார்.

“இந்தப் பயணம் ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. நான் மரபுவழியிலோ அல்லது செல்வாக்கிலோ இருந்து சினிமாவிற்கு வரவில்லை.

எனது சொந்த முயற்சியில் கடுமையாக உழைத்து முன்னேறினேன். வாழ்க்கை, அதன் சொந்த வழியில், காயங்கள், பின்னடைவுகள், தோல்விகள் மூலம் என்னை மீண்டும் மீண்டும் சோதித்தது. ஆனால் நான் ஒருபோதும் துவளவில்லை.சகித்துக்கொண்டு. நான் மீண்டும் எழுந்தேன். “நான் தொடர்ந்து முன்னேறிச் சென்றேன்,” ஏனென்றால் விடாமுயற்சி நான் கற்றுக்கொண்ட ஒன்றல்ல; அது நான் வாழ்ந்த ஒன்று” கடினமான காலங்களில் தனது ரசிகர்கள் அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

“சினிமாவில், நான் எண்ண முடியாத அளவுக்கு பல முறை விழுந்து எழுந்திருக்கிறேன். நேர்மையைத் தவிர வேறு எதுவும்’ என்னிடம் இல்லாதபோதும், நீங்கள் என்னுடன் நின்றீர்கள்.

ரசிகர்களின் அன்பு தான் நிறைய தோல்விகளை மறக்க செய்தது. நான் அதிகம் வெளியே வராமலும் பேசாமல் இருந்திருக்கிறேன் அப்போதெல்லாம் மோட்டார் பந்தயத்தில் முழு கவனத்தை செலுத்தி ரசிகர்களை மகிழ்வித்தேன் எப்பொழுதும் உங்களையும் நாட்டையும் நான் பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன் எனது வளர்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்கள் மீடியாக்கள் மேலும் என் மனைவி, மகன், மகள், அப்பா அம்மா என என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி.

எல்லோருக்கும் நான் எப்பொழுதும் நன்றியாக இருப்பேன் என்று அவர் மேலும் கூறினார்.

What do you think?

ராஞ்சனா climax மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து … அறிக்கை வெளியிட்ட Dhanush

அழகான வில்லனாக நடித்துள்ளேன் நாகர்ஜுனா