பத்ம பூஷண் விருது பெற்ற பிறகு பேட்டியளித்த நடிகர் அஜித் குமார்
2025 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம பூஷண் விருது பெற்றுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவபவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் .
அஜித் குமார், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருதை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து திங்கள்கிழமை (ஏப்ரல் 28) புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பெற்றுக்கொண்டார்.
அஜீத் Kumar தனது குடும்பத்தினருடன் சென்று விருது பெற்றுக் கொண்ட வீடியோ சமுக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. .இவருடன் நடிகர் மற்றும் அரசியல்வாதி நந்தமுரி பாலகிருஷ்ணா, மூத்த இயக்குனர் சேகர் கபூருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
அனந்த் நாக், ஷோபனா சந்திரகுமார், ரிக்கி கேஜ், கடந்த ஆண்டு 91 வயதில் காலமான பிரபல மலையாள எழுத்தாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், மறைந்த பாடகர் பங்கஜ் உதாஸு.. நல்லி குப்புசாமி, செப் தாமோதரன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி ஆகியோருக்கும் விருது வழங்கபட்டது.
விருது பெற்ற அஜித்குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பஹல்கம் தாக்குதல் கண்டனத்துக்குரியது இனிமேல் இது போன்ற செயல்கள் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அரசாங்கம் தங்களால் முடிந்ததை செய்கிறது நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அமைதியான வாழ்க்கை வாழ பழகிக்கொள்ள வேண்டும் ஆயுதப்படையை சேர்ந்த பலரை நான் சந்தித்தேன் அவர்களின் தியாகங்களுக்கு Salute.
நாம் நிம்மதியாக வாழ அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் ஒவ்வொரு மதத்தையும் சாதியும் மதிக்க நம் கற்றுக் கொள்ள வேண்டும் குறைந்தபட்ச நமக்குள்ளாவதாவது நாம் சண்டை போடாமல் அமைதியாக வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.