நான் அதிக நாள் இருக்க மாட்டேன் கதறும் நடிகர் அபிநய்…
சினிமா வாய்ப்பில்லாமலும், உடல் நலமும் பாதிக்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நடிகர் அபிநய்.
துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார் அந்த படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் இவர்தான் பார்க்க ஹீரோ மாதிரி இருக்கார் என்று தனுஷ்..ஷை ட்ரோல் செய்தனர்.
அந்த அளவிற்கு ஹீரோவுக்கு உண்டான கச்சிதமான முக அமைப்பு. சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும் உள்ளிட்ட படங்களிலும் சில Ad….. களிலும் நடித்தவருக்கு திறமையும் அழகும் இருந்தும் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
வாய்ப்பு இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்தவருக்கு கல்லிரல் பாதிக்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் இருக்கிறார்.
கல்லீரல் சிகிச்சைக்கு 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் திரைத்துறையில் இருக்கும் நண்பர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுஇருந்தார்.
அவரின் வீடியோவை பார்த்த கே பி ஒய் பாலா, அபிநய் ..யை சந்தித்து அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறார்.
அப்போது அபிநய் பாலாவிடம் நான் சீக்கிரமாக சென்று விடுவேன் அதிக நாள் இருக்க பட்டேன்’ என்று கூற அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் சீக்கிரம் நடிக்க வாங்க உங்களுடன் என்னை நடிக்க வைப்பீர்களா என்று அவரை தேற்றுகிறார் யாருக்கு என்ன கஷ்டம் என்றாலும் உதவி செய்யும் பாலாவின் கண்களில் மட்டும்தான் இப்படிப்பட்ட வீடியோ மாட்டுகிறதா?
இவருடன் நடித்த தனுஷ் இவருக்கு உதவி செய்யலாமே என்று இணையவாசிகள் பலரும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.


