தந்தை பற்றி உருகமாக பதிவிட்ட ஆர்த்தி
ஆரித்தி ரவி மோகன் விவாகரத்து தற்பொழுது நீதிமன்றத்தில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் ரூபாய் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் ஆர்த்தி உருக்கமாக தனது தந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
என்னை முதலில் நேசித்த மனிதரும் இன்னும் நேசித்துக் கொண்டிருக்கிறார் சில வார்த்தைகள் அன்றாட பயன்பாட்டில் கொண்டு வருவது கடினமானது ஆனால் இன்று நான் அதனை முயற்சி செய்கிறேன் என்னை சுற்றி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நீங்கள் மட்டும் உறுதியாக இருக்கிறீர்கள் நான் எப்படி கடந்து செல்வது என்று எனக்கு தெரியாத நாட்களும் இருந்தன நீங்கள் அப்போதெல்லாம் என்ன வேண்டும் என்று கேட்கவில்லை என் பக்கத்தில் அமைதியாகவும் உறுதியாகவும் பலமாகவும் நின்றீர்கள் அதேபோல் என் மகன்களும் இன்னும் உலகத்தை புரிந்து கொள்ள முயலும்போது அவர்கள் முக்கியமான ஒன்றை கற்றுக்கொள்கிறார்கள் என எனக்கு தெரியும் நிபந்தனை இல்லாமல் எப்படி நேசிப்பது என்பதை கேட்கிறார்கள் நீங்கள் என்னை மட்டும் வளர்க்கவில்லை எல்லாம் வழிகளும் அவர்களை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு காலத்தில் நீங்கள் என்னை நம்பிக்கையுடன் போக விட்டீர்கள் ஆனால் இப்போது அந்த பெண் நான் இல்லை என்பது எனக்கு தெரியும் எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை என்னை சோதித்து விட்டது அவள் முன்புபோலவே மீண்டும் வருவாள் என உறுதி அளிக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்