ஆண் பாவம் பொல்லாதது Movie Review
ஆ…. ஆண் பாவம் பொல்லாதது’ படம் செம்மயா இருக்கு!
டைரக்டர் கலையரசன் தங்கவேல் கலக்கிட்டாருப்பா! ஆண்-பெண் புரிதல்னா என்ன? பெண்ணியம்னா என்ன? (Feminism) இப்போ இருக்கிற பொண்ணுங்க, பெண்ணுரிமையைத் தப்பாப் புரிஞ்சிட்டு எப்படி நடந்துக்கிறாங்கங்கிற விஷயத்தை ரொம்பவும் எளிமையா, எல்லாரும் புரிஞ்சுக்கிற மாதிரி சொல்லியிருக்காரு டைரக்டர்.
படத்துல வர்ற சின்ன சின்ன கேரக்டர்கள் கூட நல்லா ஸ்ட்ராங்கா செதுக்கியிருக்காங்க. அந்த கேரக்டர்கள்ல நடிச்சவங்க எல்லாரும் ரொம்பவும் இயல்பா (பாந்தமா) இருக்காங்க.
சினிமா மாதிரி தெரியலை. நிஜத்துல நடக்கிற மாதிரி நம்ம கண் முன்னாடி இருக்கு. படத்துல வக்கீலா வர்ற ஆர்ஜே விக்னேஷ்ஷோட பெர்ஃபார்மன்ஸ் செமயா இருக்கு.
நல்ல நடிப்பு! படத்துல பேசுற வசனங்கள் (டயலாக்)லாம் அருமையா இருக்கு.
தேவையில்லாத விஷயம்னு எதுவுமே இல்ல. எல்லாமே கச்சிதமா இருக்கு. இது பெரிய பட்ஜெட் படம் கிடையாது. இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது.
பறந்து பறந்து அடிக்கிற ஃபைட் கிடையாது. மக்கள் எதுக்காகப் படத்துக்கு வர்றாங்களோ, அதை அழகாப் பூர்த்தி பண்ணியிருக்கு. அதோட, ஒரு நல்ல கருத்தையும் (மெசேஜ்) சொல்லியிருக்கு.
இது குடும்பத்தோட பார்க்க வேண்டிய ரொம்ப அழகான படம். அவசியம் எல்லாரும் பாருங்க! பெண்ணியம்னா என்னன்னு படம் சூப்பரா எடுத்துச் சொல்லுது: “நீ படி, உன் கால்ல நீயே நில்லு, உன்னோட சுயமரியாதைக்குப் பாதிப்பு வந்தா அதை எதிர்த்துப் போராடி உன் கால்ல நின்னுக்கோ. அதே நேரத்துல, நீ படிச்சு மேல வந்தது மாதிரி, உன்னை மாதிரி இருக்கிற மத்த பொண்ணுங்களையும் நீ முன்னே கொண்டு வரணும்—இதுதான் பெண்ணியம்.”
“புருஷன் காசுல எல்லாத்தையும் பண்ணிட்டு, ‘என் இஷ்டம்’னு சொல்றது, பெண்ணியம் ஆகாது!” ஆண் பாவம் பொல்லாதது…ஆனா அழகானது! அவ்வளவுதான்!


