in

12 ஜோதிர் லிங்கங்களில் சாமி தரிசனம் செய்யவும் பல நூறு கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் முறையில் பயணம் செய்யும் உத்தரப்பிரதேச மாநில இளைஞர்

12 ஜோதிர் லிங்கங்களில் சாமி தரிசனம் செய்யவும் பல நூறு கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் முறையில் பயணம் செய்யும் உத்தரப்பிரதேச மாநில இளைஞர்

சனாதன தர்மத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கவும், 12 ஜோதிர் லிங்கங்களில் தரிசனம் செய்ய உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஸ்கேட்டிங் முறையில் பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்து மதத்தின் பழமையான, நித்தியமான மற்றும் அழியாத கோட்பாடுகளைக் குறிக்கும் சனாதான தர்மத்தை இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் எடுத்துரைக்கவும், இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கணையா (30) என்ற இளைஞர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங் முறையில் பயணத்தை தொடங்கினார்.

   

இவர் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பெங்களூரு, ஆந்திரா, ஏழு மாநிலங்களைக் 108 நாட்களில் கடந்து இன்று மாலை பாம்பன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் வந்தடைந்தார்.

வட மாநில இளைஞர் கணையா ஏற்கனவே இரண்டு கோவில்களில் ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்துவிட்டு தற்போது 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமிகள் கோவில் தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார்.

இந்திய மக்கள் மத்தியில் இந்து நம்பிக்கைகளின் சனாதன தர்மத்தை எடுத்துரைக்கவும் 12 ஜோதி லிங்கங்கள் சாமி தரிசனம் செய்யவும்.

பல நூறு கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஸ்கேட்டிங் முறையில் பயணித்து வருவதாகவும் உணவு தயாரித்து தனது பேக்கில் வைத்துக் கொண்டு பயணித்து வருவதாகவும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாகவும் தெரிவித்தார்.

What do you think?

செஞ்சி தைபூசம் இரண்டாம் நாளில் முருகன் ஆலயத்தில் மழுவடித்தல் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டரில் பணியாற்றிய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்