வியக்க வைக்கும் அலங்கார மின்விளக்குகளை செய்து அசத்தும் இளைஞர்.
வியக்க வைக்கும் அலங்கார மின் விளக்குகள். மரத்தில் குரங்கு ஏறுவது, பெண் கை பம்பில் தண்ணீர் அடிப்பது, குரங்கு சைக்கிள் ஓட்டுவது, ஹெலிகாப்டர் சுற்றுவது உள்ளிட்ட பல்வேறு விதமாக வியக்க வைக்கும் அலங்காரம் மின்விளக்குகளை செய்து அசத்தும் இளைஞர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பிரபு இவர் கடந்த பல ஆண்டுகளாக அலங்கார மின்விளக்குகள் அமைத்து வாழ்வாதாரம் ஈட்டி வருகிறார். குறிப்பாக கோவில் திருவிழாக்கள் திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்பொழுது எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் பழமையை மறக்காமல் பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையிலும் அலங்கார மின்விளக்குகள் அமைத்து வாழ்வாதாரம் ஈட்டி வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் படிப்பை முடித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒலி ஒளி அமைப்பு நடத்தி வருகிறார்.
கோவில் திருவிழாவில் அனைவரையும் கவரும் வகையிலும் வியக்கும் வகையிலும் மின்சார விளக்குகளை அமைத்து அசத்தி வருகிறார். தற்பொழுது திருக்களாச்சேரியில் தீமிதி திருவிழாவிற்காக வழி நெடுகிலும் விளக்குகள் அலங்கார மின்சார விளக்குகள் கட்டிருந்தது.

இந்த அலங்காரம் மின்சார விளக்குகள் அந்த வழியாக செல்லும் அனைவரையும் நின்று வியந்து பார்க்கும் வகையில் பாராட்டும் விதமாகவும் அமைந்திருந்தது. இதில் குரங்கு தென்னை மரத்தில் ஏறுவது போன்றும், மாடியில் ஹெலிகாப்டர் இறங்குவது போன்றும், பெண் தண்ணீர் குழாயில் தண்ணீர் அடிப்பது போன்றும், குரங்கு சைக்கிள் ஓட்டுவது போன்றும் மேலும் பல்வேறு அழகிய வடிவங்களில் அலங்காரம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.
இதுபோன்று இவர் தனது திறமையை பல்வேறு திருவிழாக்கள் சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வருகிறார் இவரின் திறமையை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.


