in

பறவைகளுக்காக ஸ்கூட்டியை தொடாமல் பேருந்தில் பயணித்து வரும் இளைஞர்

பறவைகளுக்காக ஸ்கூட்டியை தொடாமல் பேருந்தில் பயணித்து வரும் இளைஞர்

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சித்திக் பாஷா. இவர் மருத்துவ கல்லூரி அருகே உள்ள ரகுமான் நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு தினமும் ஸ்கூட்டியில் சென்று வருகிறார்.

வழக்கம் போல தனது ஸ்கூட்டரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு வேலை முடித்துவிட்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்ய போனபோது ஸ்கூட்டரின் முன்பகுதியில் குருவி கூடு கட்டி இருப்பது தெரிய வந்தது. குஞ்சு பொரிப்பதற்காக தான் கூடு கட்டியிருக்கும் என அறிந்த இவர். குருவிகளை தொந்தரவு செய்யாமல் பேருந்தில் வீட்டுக்கு செல்லலாம் என முடிவெடுத்தார். தற்போது மூன்று முட்டைகளில் இருந்து மூன்று குஞ்சுகள் வெளிவந்து மூன்று குருவிகளும் பாதுகாப்பாக ஸ்கூட்டியில் தங்கி உள்ளது.

அந்த குஞ்சுகள் பறக்க ஒரு வார காலம் ஆகும் என கூறும் இளைஞர் தொடர்ந்து பேருந்திலேயே வீட்டிற்கு சென்று வருகிறார். அதோடு தினமும் அலுவலகத்திற்கு வரும்போது தாய்க்கு குருவிக்கும் தண்ணீர் வைத்து குருவிகளை பாதுகாத்து வருகிறார்

What do you think?

ஏரிக்கரை ஸ்ரீ புத்துமாரியம்மனுக்கு 27-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா

யோகியமுள்ள, திராணிவுள்ள முதலமைச்சர் ஏன் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் ஆர்.பி.உதயகுமார் கேள்வி