in

புதுச்சேரி.. வரும் சட்டமன்ற தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுகிறேன்… லட்சிய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி… மார்டின் குழுமம் மற்றும் ரோட்டரி இண்டர்நேஷனல் இணைந்து CSR நிதியில் இருந்து PIMS மருத்துவமனை,குளூனி மருத்துவமனை, 3 டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் கிட்னி சென்டர் மருத்துவமனைக்கு 7 டயாலிசிஸ் இயந்திரங்கள் என மொத்தம் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. டயாலிசிஸ் இயந்திரங்களை மார்டின் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் அவரது தாயாரும் மார்டின் குழுமத்தின் இயக்குநருமான டாக்டர். லீமா ரோஸ் மார்டின் ஆகியோர் வழங்கினார்கள். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரி முழுவதும் குடிநீர் பிரச்சினை என்பது பெரிய அளவில் உள்ளது, அதனை சரி செய்ய சிங்கzப்பூரை சேர்ந்த CPG நிறுவனத்துடன் சேர்ந்து திட்டங்களை வகுத்து வருவதாக கூறினார், தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், விரைவில் உறுதி செய்யப்பட்டு, ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார், மேலும் அரசியல் என்பது விளையாட்டு அல்ல மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம். அதன் காரணமாகவே பொறுமையாக நகர்வுகளை மேற்கொள்வதாகவும், மக்களுக்கு என்ன தேவையோ அதனை நாங்கள் செய்வோம் என கூறினார், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து காரைக்கால் சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்ததாகவும். டெல்லிக்கு அழைத்தாலும் செல்வேன் எனவும் அவர் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார் பேட்டி – ஜோஸ் சார்லஸ் மார்டின், நிறுவனத்தலைவர் – லட்சிய ஜனநாயக கட்சி.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் கடலில் படகு சவாரி உயிரிழந்த சம்பவம் 

பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் இவருடைய மனைவி சோனியா. இவர்களுக்கு சதீஷ், அஸ்வின், சதீஸ்வரி என்ற 3 குழந்தைகள் உள்ள நிலையில் விஜய் தனது உறவினர்கள் 8 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இதனிடையே இன்று வீராம்பட்டினம் கடல் பகுதியில் சதீஷ் என்பவரின் படகில் படகு சவாரி செய்தபோது திடீரென எழுந்த ராட்சச அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில், படகில் சவாரி செய்த 8 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.

இதனை கண்ட மீனவர்கள் படகுகள் மூலம் கடலில் உயிருக்கு போராடியவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.இதில் சோனியா கடலில் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோனியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மற்ற 7 பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் 5 பேருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் இது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லைசன்ஸ் இல்லாமலும், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்காமல் படகு இயக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் அனுமதியின்றி நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார் அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது குறிப்பிடத்தக்கது.

What do you think?

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்

Roulette Low Stakes UK for Mac: A Comprehensive Guide