in

தாராபுரத்தில் அரக்க முக முக முடிய அணிந்து நூதன கண்டன ஆர்ப்பாட்டம்..

தாராபுரத்தில் அரக்க முக முக முடிய அணிந்து நூதன கண்டன ஆர்ப்பாட்டம்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் பொன்னர் நிலையம் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகம் முன்பு இன்று மதியம் 2 மணி அளவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் அம்சராஜ் தலைமையில் அரக்க முக முகமுடி அணிந்து நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக அரசே காவல்துறையை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமே ஓர் எச்சரிக்கை அரக்க குணம் கொடுங்கோன்மை ஜனநாயக விரோத செயல் புரிவதா?
சாலை பணியாளர் வாழ்வாதார கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்ற கோரி சென்னையில் (12.08.2025) இல் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற சாலை பணியாளர்களை கைது செய்து கொடுமைப்படுத்திய அரக்க குணம் கொண்ட தமிழ்நாடு அரசு.! காவல்துறையை.! நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமே.!
வன்மையாக கண்டிக்கின்றன.

தொழிற்சங்க விரோதப் போக்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை வன்மையாக கண்டிக்கின்றன என கோசமிட்டு அரக்க முக முகமுடியணிந்து நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டத் தலைவர் வெங்கடசாமி, கோட்ட இணைச்செயலாளர் மணிமொழி, கோட்டக் துணைத் தலைவர் தங்கவேல், கோட்ட இணைச்செயலாளர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆகியோர்களின் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இதில் பாலசுப்ரமணியன், மேகலிங்கம், செந்தில்குமார், சாந்தி, நிர்மலா, ராணி, செல்வகுமார் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர். இறுதியாக கோட்டச் செயலாளர் தில்லையப்பன் நன்றியுரை ஆற்றினார்..

What do you think?

ரயில் மறியல் போராட்டம் பாதுகாப்பணியில் போலீசார்

அன்புமணி விளக்கமளிக்க வேண்டுமென ராம்தாஸ் வலியுறுத்தல்