விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சவுக்குத்தோப்புல கடந்த 7-ம் தேதி ஒரு உடல் அழுகிய நிலையில கிடந்துச்சு. உடம்பு முழுக்க வெட்டுக்காயங்கள் இருந்ததால போலீசாருக்கு இது கொலைன்னு சந்தேகம் வந்துச்சு.
விசாரணையில இறங்குன போலீஸ், சைபர் கிரைம் உதவியோட அந்த நபர் யாருன்னு கண்டுபிடிச்சாங்க.கொலை செய்யப்பட்டவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயக்குமார் (40). குறும்பட இயக்குநரா இருக்குற இவருக்கு, சென்னையைச் சேர்ந்த துணை நடிகை பூஜா (20) கூட இன்ஸ்டாகிராம் மூலமா பழக்கம் ஏற்பட்டிருக்கு.
ஜெயக்குமார், பூஜாவைத் தீவிரமாக் காதலிச்சிருக்காரு. “உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்”னு விடாம தொந்தரவு கொடுத்திருக்காரு. ஆனா பூஜாவோ, “எனக்கு ஏற்கனவே தேவான்னு ஒரு காதலன் இருக்கான்”னு சொல்லியும் ஜெயக்குமார் கேக்கலையாம்.
ஒருகட்டத்துல இந்தத் தொந்தரவு தாங்க முடியாம பூஜா தன் காதலன் தேவாகிட்ட விஷயத்தைச் சொல்லிருக்காரு.ஜெயக்குமாரைத் தீர்த்துக்கட்ட முடிவு பண்ண தேவா, தன் நண்பர்களோட சேர்ந்து ஒரு பிளான் போட்டாரு. வழி தெரியாத ஜெயக்குமாரை விழுப்புரம் பக்கம் வரவழைச்சு, ரெண்டு சிறுவர்கள் மூலமா சவுக்குத்தோப்புக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அங்க வச்சு ஜெயக்குமாரை கொடூரமா வெட்டிக் கொலை செஞ்சுட்டு எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டாங்க.கண்டாச்சிபுரம் பஸ் ஸ்டாப்ல இருந்த சிசிடிவி (CCTV) கேமராவுல ஜெயக்குமார் போன் பேசிட்டு இருக்குறது பதிவாகி இருந்துச்சு.
அதை வச்சு ட்ராக் பண்ணப்போ தான் பூஜா மேல போலீசாருக்கு சந்தேகம் வந்துச்சு. முகப்பேர்ல இருந்த பூஜாவைத் தூக்குனதும், “நானும் என் காதலனும் சேர்ந்துதான் கொன்னோம்”னு உண்மையைக் கக்கிட்டாரு. இப்போ பூஜா, அவரோட காதலன் தேவா, தோழி துர்கான்னு மொத்தம் 9 பேரை போலீசார் கைது செஞ்சிருக்காங்க.


