சுனாமி 21ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
சுனாமி 2 1ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி, ஆயிரம் பேரை அடக்கம் செய்த சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை சுனாமி ஏற்பட்டு 21ஆம் ஆண்டு நினைவு தினம் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் பொதுமக்கள் 6065 பேர் உயிரிழக்க காரணமான சுனாமி 8.35மணியளவில் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கன்னி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி இன்று காலை நடைபெற்றது.
இதுபோல் வேளாங்கன்னியில் சுனாமியால் உயிரிழந்த 1000த்திற்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த வேளாங்கண்ணி ஆர்ச்யில் உள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதிப் அமைதிப் பேரணியாக அஞ்சலி செலுத்தினர். அப்போது பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர்.

சுனாமி ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்து போனாலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து இருந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் கதறி கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தியும் மாலைகளை வைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.


