in

தஞ்சாவூரில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம்

தஞ்சாவூரில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம்

 

ரஷிய புரட்சியின் 108 ஆம் ஆண்டையொட்டியும், ஜனநாயக விரோத பாசிச மோடி அரசை கண்டித்தும் தஞ்சாவூரில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐஎம்எல் லிபரேசன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை, மக்கள் அதிகாரம், மகஇக ஆகிய கட்சிகளின் சார்பில் நடைபெற்ற இப்பேரணி ஆற்றுப்பாலம் அருகே தொடங்கி, காந்திஜி சாலை, அண்ணா சிலை வழியாக பனகல் கட்டடம் அருகே முடிவடைந்தது. இப்பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் கோ. சக்திவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என். சீனிவாசன் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சின்ன. பாண்டியன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலர் முஅ. பாரதி, மாநகரச் செயலர் ஆர்.பி. முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலர் எம். வடிவேலன், சிபிஐஎம்எல் லிபரேசன் மாநகரச் செயலர் எஸ்.எம். ராஜேந்திரன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா. அருணாச்சலம், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. லெனின், மக்கள் அதிகார மூத்த தலைவர் காளியப்பன், சிபிஐஎம்எல் லிபரேசன் மாவட்டச் செயலர் எம். மாசிலாமணி, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலச் செயலர் கவிஞர் பாட்டாளி, மகஇக மாநில இணைச் செயலர் ராவணன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் வரவேற்றார். நிறைவாக, என்டிஎல்எப் ஆர். லட்சுமணன் நன்றி கூறினார்.

What do you think?

நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டா இருந்தவர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

பச்சையம்மன் ஆலய ஜீரணத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்….