in

A.R. முருகதாஸ் கதை தேராது..ன்னு மறுபடி நிரூபிச்சிட்டாரு… மதராசி மண்ட வலி…. SK effort total வேஸ்ட்


Watch – YouTube Click

A.R. முருகதாஸ் கதை தேராது..ன்னு மறுபடி நிரூபிச்சிட்டாரு… மதராசி மண்ட வலி…. SK Effort Total வேஸ்ட்

 

ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற பிளாக் பஸ்டர் Movie... களை தந்த ஏ.ஆர். முருகதாஸ்….இன் மதராசி திரைப்படம் AR..இக்கு வெற்றியை தந்ததா என்று பார்போம் கடந்த பத்து ஆண்டுகளில் எந்தப் படமும் அவரது திறமை யை நிரூபிக்க வில்லை…

சிவகார்த்திகேயன் நடித்த மதராசி முதல் பாதி ரசிகர்களை ஈர்த்தது உண்மைதான் அதே Flow..ல போனா இரண்டாம் பாகம் நம்மை வெச்சி செஞ்சி..டுச்சி ..

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர விராட் (வித்யுத் ஜம்வால்), தனது நண்பர் சிராக் (ஷபீர் கல்லரக்கல்) உடன் இணைந்து ஒரு கும்பலுடன் கைகோர்க்கிறார்.

பிரேம்நாத் (பிஜு மேனன்) தலைமையிலான தேசிய புலனாய்வு அவர்களைத் தடுக்க முயற்சிக்கிறது, ஆனால் முயற்சி தடுமாறுகிறது. அந்த நேரத்தில், அவர் எதிர்பாராத விதமாக தன்னை மாய்த்து கொள்ள விரும்பும் ரகு ராமை (சிவகார்த்திகேயன்) சந்தித்து, அவரை தனது டீம்….மில் சேர்த்து கொள்கிறார்..

இந்த ரகு ராம் யார்? அவர் ஏன் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புகிறார்? மாலதி (ருக்மிணி வசந்த்) ..இக்கும் ரகுவுக்கும் என்ன தொடர்பு…. பிரேம்நாத்தின் திட்டம் வெற்றி பெற்றதா? வில்லன் திட்டம் தவிடு பொடி யானதா? போன்ற கேள்விக்கு மதராசி விடையளிக்க முயற்சித்திருகிறது.

பிளஸ் பாயிண்ட்ஸ்:

இயக்குனர் கதாநாயகனுக்கு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை கொடுத்திருகிறார் ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார்.

சிவகார்த்திகேயன் மட்டும் எது எப்படி இருந்தாலும் தன் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறார் பாவம். . முதல் பாதியில் கதை லாஜிக்..குடன் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

சிவகார்த்திகேயன் நகைச்சுவை காட்சியில் ரசிகர்களை மகிழ்விக்கிறார், மேலும் பிஜு மேனனுடன் அவரது வேடிக்கையான தருணங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ருக்மிணி வசந்த் சிவ கார்த்திகேயனுடன் ஈடு கொடுத்து நடிக்க முயற்ச்சித்திருக்கிறார். ஆனால் total ஸ்கோர் ….ரை SK மட்டுமே தட்டி தூக்கிடார்.

படத்தில் அதிரடித் காட்சிகள் அனல் பறக்கிறதுமதராசி ஆக்‌ஷன் பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, ஏ.ஆர்.முருகதாஸ் நம் நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் விளைவிக்கும் தீங்கு பற்றிய சமூக செய்தியை வழங்க முயற்சிக்கிறார், (படம் முழுக்க முயற்சி மட்டுமே செய்திருக்கிறார் ) அவரது நோக்கம் பாராட்டுக்குரியது திரைகதையை கொண்டு சென்ற விதம் தான் சரி இல்லை.

ஆரம்பம் நன்றாக இருந்தாலும் போக போக ஏ.ஆர்.முருகதாஸ் தடுமாற்றம் அப்பட்டமாக தெரிகிறது . ஆரம்பிச்சிடோம் எப்படியாவது படத்தை நல்ல படியா முடிச்சிடனும் சாமி..இன்னு வேண்டிக்கிட்டு படத்தை ஒட்டிருக்காறு மதராசி.

ஆங்காங்கே கஜினி மற்றும் துப்பாக்கி படத்தை நினைவூட்டுகிறது, ஆனால் மதராசி புதுமையை உருவாக்கவில்லை, ஏனெனில் Action Sentiments எதுவும் சிலிர்க்க வைக்க வில்லை.

ஆக்‌ஷன் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். Answer Keys..சை கையில் வைத்து கொண்டு படம் பார்த்த Feelings…சை கொடுகிறது.

இரண்டாம் பாதி கதை கடைசி வரை முன்னேற்றம் இல்லாமல் நகர். படம் வெட்டியா நீட்டிக்கப்படுவதாக உணரும்போது எடிட்டிங்..கிலும் சொதப்பிட்டாங்க.

வித்யுத் ஜம்வாலின் கதாபாத்திரம் வழக்கமான வில்லனாகக் காட்டப்பட்டிருகிறது. காதல் காட்சியாவது Romantic…கா இருக்குமான்… பார்த்தா அங்கேயும் கோட்டை விட்டுடாறாரு இயக்குனர்.

பாடல்கள் வேஸ்ட் படத்திற்கு மதராசி என்று ஏன் பெயர் வைத்தார்..இன்னு தெரியலை டைட்டில்..ளுக்கும் படத்திற்கும் சம்மந்தமே இல்லை.
அனிருத் ரவிச்சந்தரின் பாடல்களும் பின்னணி இசையும் மனசுல ஒட்டல. அனி… கூட மதராசியை பழி வாங்கிட்டார்..

ஒளிப்பதிவாளர் சுதீப் அதிரடி காட்சிகளை நேர்த்தியாக கேமரா..வுக்குள் கொண்டுவந்திருப்பது சற்று ஆறுதலே ஏ.ஆர்.முருகதாஸின் சமீபத்திய படங்களுடன் ஒப்பிடும்போது, மதராசி திருப்தி அளிக்கவில்லை.

சிவகார்த்தி சிறப்பாக நடித்திருந்தாலும், திரைக்கதை சொதப்பல் SK..வின் Effort…. டை . காலி பண்ணிடுச்சி .மொத்தத்தில், மதராசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி ஒரு பொழுதுபோக்கு படமா மாறிடுச்சி.

Cute and Handsome ..ஆ பார்த்த சிவாவை படம் முழுக்க அலங்கோலமா காட்டி ரசிகைகளை கதற வைத்துட்டாரு இயக்குனர், படம் ஆரம்பிக்கும்போது விஜய்காந்தை ஏன் இயக்குனர் காட்டுனாரு..இன்னு படம் முடியும் போது தான் தெரியுது … நடிகர் விஜயகாந்த் படத்தை பார்த்த Feel ..யை கொடுக்குது மதராசி.

What do you think?

செஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவமுகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

பொய் வழக்கு போடப்பட்டிருகிறது…நான் யார் என்று நிருபிக்கின்றேன்… சஞ்சனா கல்ராணி