கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் எம்எஸ்ஆர் மஹாலில் மாவட்ட செயலாளர் அரசமுதல்வன், தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் அறிவழகன், மண்டல துணை செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் அண்ணாதுரை, கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் அரசாங்கம், ஒன்றிய செயலாளர்கள் தென்னூர் தென்னவன், காசிதமிழ், மகளிரணி மாவட்ட செயலாளர் பாத்திமுத்து, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர். கலந்து கொண்டனர்.
இதில் நகர ஒன்றிய முகாம் நிர்வாகிகள் தேர்வு செய்வது வாக்கு சாவடி முகவர் குறித்தும் வாக்குச்சாவடி முகவர் நியமனம் செய்வது குறித்தும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் விண்ணப்பம் பெறுவது குறித்தும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு சுவர் விளம்பரம் குறித்து உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

