வடலூரில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது
வடலூர் நான்கு முனை சந்திப்பில் கடந்த 35 ஆண்டுகளாக அமைந்திருந்த புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகிய பெருந்தலைவர்களின் சிலையை நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.


அகற்றப்பட்ட சிலையை வடலூர் புதிய பேருந்து நிலைய முகப்பில் உடனடியாக அமைத்திட வலியுறுத்தி விடுதலை புலிகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செயலாளர் பன்னீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை தமிழரசன் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் பேசுகையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நிறுவப்பட்டது.
இந்நிலையில் சிலையை நெடுஞ்சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதற்காக இரவோடு இரவாக நகராட்சி நிர்வாகம் அகற்றி அதனை குப்பைகளை கொண்டு செல்லும் வாகனத்தில் எடுத்துச் சென்றது மிகவும் வேதனையாக உள்ளது எனவும்.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெண்ணிய விடுதலை பேசிய தந்தை பெரியார் ஆகியோரின் சிலைகளை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற நகராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
காலதாமதம் மேற்கொள்ளாமல் அகற்றப்பட்ட சிலைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக வெங்கல சிலைகளாக பேருந்து நிலைய முகப்பு பகுதியில் அமைக்க வேண்டும்.
எனவும் அமைக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கும் திமுக அரசிற்கும் எச்சரிக்கை விடுகிறோம் என்று தெரிவித்தனர்.


