in

தேனியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

தேனியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

தேனி பங்களா மேட்டில் உள்ள குலசேகரன் மருத்துவமனையில் சிவமுருகன் அறக்கட்டளை மற்றும் தேனி விருதுநகர் இந்து நாடார்கள் மகமை அபிவிருத்தி பண்டு இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது .

   

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்குவதற்காக இரத்ததானம் வழங்கிய நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் சின்னக்கண் துணைத் தலைவர் சிதம்பரம் செயலாளர் ஏ எம் ஆர் சந்திரகுமார் இணை செயலாளர் ஏ என் என் ஹரி ராம் பொருளாளர் ஏ .வி செந்தில் நாதன் ஆகியோர் தலைமையிலும் குலசேகர் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் சக்திவேல் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் வணிக சங்க நிர்வாகிகள், இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ,மனிதநேய காப்பகம் நிர்வாகிகள்,மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் இந்த இரத்த தானம் வழங்கும் விழாவில் இரத்த தானம் வழங்கிய சமூக ஆர்வலர்களுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி அலுவலர் பிரியா பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.இந்த இரத்ததான முகாமில் 100 க்கும் ஏராளமானோர் பங்கேற்றனர்

What do you think?

சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், கை, கால், தலை துண்டித்த நிலையில் கிடப்பதால் பரபரப்பு

 திடீரென நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் நெல் முட்டைகளை வைத்து  காத்திருக்கும் அவல நிலை