in

மகா சண்டிகா தேவி யாத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு

மகா சண்டிகா தேவி யாத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு

 

குறிஞ்சிப்பாடி அருகே உலக நன்மை வேண்டி மகா சண்டிகா தேவி யாத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு…

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பூவாடைகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ சக்தி சிவமணி அருள் வாக்கு சித்தர் பீடத்தில் உலக நண்மை வேண்டி ஸ்ரீ மகா சண்டிகா தேவி யாகம் நடைபெற்றது.

இந்த மகா சண்டிகா தேவி யாகத்தில் 13 மகா சக்திகளை போற்றும் விதமாக 13 அத்தியாயங்கள் கொண்ட 700 சப்தசதி மந்திரங்களை சிவாச்சாரியர்கள் உச்சரிக்க, மகா சண்டிகா தேவி யாகத்தில் 108 கோம திரவியங்கள், பதின் மூன்று பட்டு அங்க வஸ்தரங்கள் மற்றும் பழவ வகைகள், பூக்கள் உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு மகா சண்டிகா தேவி யாகம் நடைபெற்றது.

 

மேலும் வேத மந்திங்கள் உச்சரிக்க நடைபெற்ற மகா சண்டியாகத்தில் பக்தர்கள் தங்களின் கல்வி, தொழில், வணிகம், தங்களின் நலனுக்காகவும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

What do you think?

புது கரன்சி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்