பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அம்மன் வழிப்பாட்டிற்கு சிறப்புமிக்க நாளான இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு திரளான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிப்பட்டனர்.
முன்னதாக கோவில் முன் மண்டபத்தில் நெய்விளக்கு சூடம் ஏற்றி வழிப்பட்ட பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் அலகு குத்தி பால்குடம் எடுத்தும் அக்னிச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் சாமி தரிசனம் செய்தனர்.
அம்மனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர், பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது .
ஆடி மாத வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் , கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் .


