in

பொங்கல் திருநாளை முன்னிட்டு எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி…

பொங்கல் திருநாளை முன்னிட்டு எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்பி உத்தரவின் பெயரில் நடைபெற்ற.


தைப்பொங்கல் திருவிழாவின் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அதிமுக செஞ்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தசாமி,எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வி.ஆர்.பிரித்திவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்தனர்.

விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு ஊராட்சியில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு கிரிக்கெட், போட்டியில் பங்கேற்று விளையாடினர்.


வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக மூவாயிரம் ரூபாய் வழங்கி இளைஞர்களை பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் மனோகரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய கழகப் பொருளாளர் பாலு, அம்மா பேரவை செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆறுமுகம்,மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சுகுமார்,நகர வர்த்தக அணி செயலாளர் பாலசுப்பிரமணியன்,எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பாக்கம் செல்வம்,மெடிக்கல் ரமேஷ்,மகிமை நாதன்,
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

What do you think?

புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொகுதி தலைவர்கள் 6 பேரில் 30 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து இரண்டாவது பட்டியலை ஆர். எல் . வெங்கட்ராமன் வெளியிட்டார்

ஆற்காடு பகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட துணை பொது செயலாளர்