in

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க்க தயாராகும் பிரம்மாண்ட கேக்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க்க தயாராகும் பிரம்மாண்ட கேக்

 

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் 50 கிலோ உலர்பழங்கள்-நட்ஸ்கள் மற்றும் 20 லிட்டர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகளுடன் தயாராகும் பிரம்மாண்ட கேக்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி தயாராகி வருகிறது அதன் ஒரு பகுதியாக, ராயல் பார்க் உணவகத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் நிகழ்வு நடைபெறும்.

14 ஆண்டாக இவ்வாண்டிற்கான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்க பழக்கலவை ஊறவைக்கும் விழா நடைபெற்றது.பாரம்பரிய முறைப்படி பழ வகைகளில் மதுபானங்களை ஊற்றி கலந்து தயார் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, ஹோட்டலில் நிர்வாக இயக்குனர் சமீர் முகமத் மற்றும் CEO ஹோட்டலின் பொது மேலாளர் மற்றும் ஹோட்டல் விருந்தினர்கள் ஹோட்டல் ஊழியர்கள் கலந்துகொண்டு கேக் தயாரிக்கும் பணிமை தொடங்கி வைத்தனர்.

50 கிலோ எடையில் திராட்சை, முந்திரி, செரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், பேரிச்சம் என 20 வகையான நட்ஸ் மற்றும் 20 லிட்டர் உயர் ரக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுவகைகளை கலந்து மகிழ்ந்தனர்.இந்த கலவையானது 45 நாட்கள் ஊர வைக்கப்படுகிறது.

இவற்றை பயன்படுத்தி 120 கிலோ அளவில் பிரமாண்ட கேக் தயாரித்து காட்சிப்படுத்தி வாடிக்கையாளர் மற்றும் சக ஊழியர்களுக்கு புத்தாண்டு வரை வழங்கப்பட உள்ளதாக தலைமை சமையல் வல்லுநர் தெரிவித்தார்.

What do you think?

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

அன்னை காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா