in

கிழக்கு ரோட்டரி சங்கம், மலர் மல்டி ஸ்பெஷலிஸ்ட், விஷ்ணு மெடிக்கல் சென்டர் நடத்தும் வழக்கறிஞர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிழக்கு ரோட்டரி சங்கம், மலர் மல்டி ஸ்பெஷலிஸ்ட், விஷ்ணு மெடிக்கல் சென்டர் நடத்தும் வழக்கறிஞர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் கிழக்கு ரோட்டரி சங்கம், மலர் மல்டி ஸ்பெஷலிஸ்ட், விஷ்ணு மெடிக்கல் சென்டர் நடத்தும் வழக்கறிஞர்களுக்கு, மற்றும் குமாஸ்தாக்களுக்கு சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இருதய நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலட்சுமி, கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மணிகண்ட ராஜா, கூடுதல் சார்பு நீதிபதி சிவக்குமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி விஜய் ஆனந்த், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பரிமளா, நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்.

இதில் வழக்கறிஞர்கள் சங்கம் செயலாளர் கர்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் பாலகணேஷ், செயலாளர் அசோக், பொருளாளர் பழனி, மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் 600 வழக்கறிஞர்களில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பயனடைந்தனர்.

What do you think?

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்.