in

16அடி நீள அலகைக் குத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பெண் பக்தர்.

16அடி நீள அலகைக் குத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பெண் பக்தர்.

 

மல்லியம் முத்து மாரியம்மன் ஆலய 16-ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா பெண் பக்தர் ஒருவர் 16அடி நீள அலகைக் குத்தி நேர்த்திக்கடன்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மல்லியம் முத்து மாரியம்மன் ஆலய 16 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரைகளில் இருந்து சக்தி கரகம் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறும், ஒரு பெண் பக்தர்
16 அடி அலகை வாயில் குத்தியவாறும் காவடியை சுமந்து வந்தனர்.

இதனுடன் அலங்கார காவடிகள் புறப்பட்டு வானவேடிக்கை மேளதாள வாக்கியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர், பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகமும் மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முத்து மாரியம்மனை வழிபட்டுச் சென்றனர்.

What do you think?

தமிழக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கோயில் குத்தகை நிலங்களை மீட்டதாக பதாகை வைத்த விவகாரம்