தென்காசி மாவட்டம் கடையம் அருகே பசுவிற்கு வளைகாப்பு நடத்திய விவசாய தம்பதி – கொம்பில் வளையலிட்டு சொந்த பந்தங்களுக்கு விருந்து வைத்த ரூசிகரம் சம்பவம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் கனகராஜ் – பால சரஸ்வதி தம்பதியினர், கனகராஜ் என்பவர் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் காளை, பசு மாடுகளை அவரது வீட்டில் வளர்த்து வருகிறார். இதில் அவர் வளர்த்து வரும் ஒரு பசுமாடு இவரது வீட்டிலேயே கன்று குட்டியில் இருந்து வளர்ந்து வருகிறது. தற்போது அந்த பசுவானது முதல் சினையாகி ஈற்றிக்கு தயாராக உள்ளது.
இந்த பசு மாட்டிற்கு விவசாய தம்பதி வளைகாப்பு விழா நடத்தி அணைவரதின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது கொம்பில் வளையல் அணிவித்து, பட்டு உடுத்தி வளைகாப்பிற்கு சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்தும் அசத்தினர். இந்தச் சம்பவம் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


