திண்டுக்கல்லில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சேவல் கண்காட்சியில் மூன்று லட்சம் ரூபாய் வரை விலைபோன விசிறி வால் சேவல் : 500க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு
தமிழர்களின் பாரம்பரியமாக தங்களது வீடுகளில் ஆடு மாடு, கோழி, சேவல் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த கால்நடை வளர்ப்பில் ஒன்றான
சேவல் இனம் அழிந்து போவதை தடுப்பதற்காக திண்டுக்கல்லில் அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் குழு வருடம் தோறும் சார்பில் கிளிமூக்கு, மற்றும் விசிறிவால் சேவல் கண்காட்சி நடத்தப்பட்ட வருகிறது
கடந்த 10 ஆண்டுகளாக இந்த கண்காட்சி திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 11வது ஆண்டாக கிளி மூக்கு விசிறி சேவல் கண்காட்சி தனியார் தோட்டத்தில் நடைபெற்றது
இதில் பங்கேற்பதற்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சேவல் வளர்ப்போர்
தங்களது சேவல்களை இந்த கண்காட்சிக்கு காட்சிப்படுத்த கொண்டு வந்துள்ளனர்
அதேபோல தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் திருச்சி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவிலான சேவல்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது இங்கே கொண்டுவரப்பட்ட சேவல்களை அதற்கென உள்ள நடுவர்கள் அதன் உயரம், மூக்கு வால், கொண்டை, கம்பீரம் ஆகியவற்றை வைத்து தேர்வு செய்து வருகின்றனர்.
சிறந்த சேவல்களுக்கு எல் டிவி,பிரிட்ஜ், உள்ளிட்ட பொருட்கள் விழா ஏற்பாட்டாளர்கள் மூலம் பரிசாக வழங்கப்படுகிறது இங்கு கொண்டுவரப்பட்ட விசிறிவால் சேவல் ஒன்று ரூபாய் மூன்று லட்சத்திற்கு விலை கேட்கப்பட்டது
ஆனால் அதன் உரிமையாளர் அதை விற்பனை செய்ய மறுத்துவிட்டார்வெளி மாநிலங்களைச் சேர்ந்த சேவல் வளர்ப்போர்
சுமார் 1000 கிலோ மீட்டர் 2000 முதல் கிலோமீட்டர் வரை தங்களது கார்களில் பயணம் செய்து பெற்ற பிள்ளைகளைப் போல சேவல்களை பாதுகாப்பாக கொண்டு வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது
