in

vமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல்

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல்

 

விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

சதுர்த்தி விழாவில் மௌனமடம் கட்டளை திருஞானசம்பந்த சுவாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்பு…

விநாயகரை வழிபட்டு எந்த ஒருகாரியத்தை தொடங்கினால் அந்த காரியம் நல்லபடியாக அமையும் என்பது இந்துமக்களின் நம்பிக்கையாகும். இதனால் விநாயகரை முழுமுதற்கடவுளாக இந்துமக்கள் அதிக அளவில் வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்படும்.

திருச்சியில் பிரசித்திபெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையர் கோவிலில் விநாயகர்சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிகாலை 5மணிக்கு நடைதிறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 50கிலோ பச்சரிசி, 50 கிலோ உருண்டை வெல்லம், 2 கிலோ எள், 1 கிலோ ஏலக்காய் மற்றும் சாதிக்காய், 6 கிலோ நெய், 100 தேங்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு தலா 75கிலோ எடையில் 150கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு, சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்பட்டு, பின்னர் விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது.

இவ்விழாவில் மௌனமடம் கட்டளை திருஞானசம்பந்த சுவாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கொழுக்கட்டையானது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.

 

மேலும் கம்பத்தடி விநாயகர், கஜமுக விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

மாவட்டத்தின் பிறவிநாயகர் ஆலயங்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றுவருகிறது.

What do you think?

அத்தி மரத்திலான 32 அடி உயர விஸ்வரூப வினாயகர் ஊர்வலம்

கொக்கூர் கைலாசநாத சுவாமி திருக்கோயில் ஆலய மகா கும்பாபிஷேகம்