in

 ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) – Movie Review

 ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) – Movie Review

 

இன்னைக்கு தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருந்துச்சு.

ஏன்னா, பிரதீப் ரங்கநாதன் நடிச்சாலே அது 100 கோடி கிளப்ல சேர்ந்துடும்னு ஒரு டாக் இருக்கு. அதுமட்டும் இல்லாம விக்னேஷ் சிவன் – அனிருத் – பிரதீப்னு ஒரு செம காம்போ!

படம் எப்படி இருக்கு? இதோ அனல் பறக்கும் விமர்சனம்! இந்தப் படத்தோட ஸ்பெஷாலிட்டியே இதோட கதைக்களம் தான்.

கதை 2040-ல நடக்குது. அப்போ டெக்னாலஜி நம்ம வாழ்க்கையை எந்தளவுக்கு ஆக்கிரமிச்சிருக்கும்னு காட்டியிருக்காங்க.

எஸ்.ஜே. சூர்யா கண்டுபிடிச்ச “LiK” அப்படிங்கிற ஒரு மொபைல் ஆப் தான் மொத்த ஊரையும் ஆட்டிப்படைக்குது.

இந்த ஆப் மூலமா உங்க லவ்வர் உண்மையா இருக்காங்களா இல்லையான்னு கண்டுபிடிச்சிடலாம். அதுலயும் அந்த “Love Meter” அப்டேட் வந்த பிறகு, காதலை சதவீதத்துல (Percentage) அளவிட ஆரம்பிக்கிறாங்க.

இதனால எத்தனையோ ஜோடிகள் பிரிஞ்சு போறாங்க. நம்ம ஹீரோ பிரதீப் ரங்கநாதன், ஒரு அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்து பையன். அவர் டெக்னாலஜி பக்கமே போகாம, இயற்கை சூழ்ந்த ஒரு இடத்துல வளர்றாரு.

ஆனா, ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியை பார்த்த உடனே அவருக்கு லவ் வந்துடுது. அவங்க கிட்ட பேசணும்னா இந்த LiK ஆப் கண்டிப்பா வேணும்.

சரி, ஆப்பை யூஸ் பண்ணி லவ் மீட்டர்ல செக் பண்ணி பார்த்தா.. அங்க தான் ஒரு ட்விஸ்ட்! இவங்க லவ் வெறும் 3% தான்னு அந்த ஆப் காட்டுது. இதனால ஹீரோயின் பிரேக்-அப் பண்ணிட்டு போயிடுறாங்க.

“ஒரு ஆப் எப்படி என் காதலை முடிவு பண்ணலாம்?”னு ஹீரோ போராடுறது தான் மீதிக் கதை. பிரதீப் ரங்கநாதன் மொத்த படத்தையும் அவரோட தோள்ல சுமந்துருக்காரு.

ஆனா, சில எமோஷனல் சீன்ஸ்ல இன்னும் கொஞ்சம் பெட்டரா நடிச்சிருக்கலாம்னு தோணுது.

எஸ்.ஜே. சூர்யா வில்லன் ரோல் தான், ஆனா அவருக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டான சீன்ஸ் வச்சிருக்கலாம். அவரோட முழு திறமையை இந்தப் படத்துல பயன்படுத்தலையோன்னு ஒரு ஏமாற்றம் இருக்கு.

படத்தோட மிகப்பெரிய பலமே அனிருத் தான்! “எனக்கென யாரும் இல்லையே”, “தீமா தீமா”னு பாட்டு எல்லாம் வேற லெவல். பிஜிஎம் (BGM) படத்தைத் தாங்கிப் பிடிக்குது.

இந்த படத்தோட பிளஸ் என்னன்னா 2040 சென்னையை கிராபிக்ஸ்ல காட்டிய விதம் சூப்பர். அனிருத் இசை மற்றும் விக்னேஷ் சிவனின் அந்த புதுமையான கான்செப்ட்.

இந்த படத்தோட மைனஸ் என்னன்னா செகண்ட் ஆஃப் ரொம்ப மெதுவா போகுது. காமெடி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு சிரிக்க வைக்கல. கதைக்களம் புதுசா இருந்தாலும், திரைக்கதையில கொஞ்சம் சுவாரஸ்யம் கம்மிதான்.

மொத்தத்தில்: “Love Insurance Kompany” – ஒரு புதுமையான முயற்சி. இன்னைக்கு இருக்குற சோசியல் மீடியா உலகத்துக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லியிருக்காங்க.

ஒரு தடவை கண்டிப்பா தியேட்டர்ல பார்க்கலாம்! இந்த லவ் மீட்டர் கான்செப்ட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? அது படம் பார்த்தால் தான் தெரியும் பார்த்துட்டு சொல்லுங்க.

What do you think?

உலகநாயகன் கமல்ஹாசன் ஸ்டேட்மென்ட் தான் செம வைரல்!

புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு திருவிழா கொடியேற்றம்