தமிழக அரசியல் களம் இப்போ தேர்தலை நோக்கி அனல் பறந்துட்டு இருக்கு! இதுல நம்ம தளபதி விஜய்யோட ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) பண்ற அலப்பறைதான் இப்போ சோஷியல் மீடியாவுல டாப் ட்ரெண்டிங்.
திருவெறும்பூர் தொகுதியில தவெக சார்பா போட்டியிடுற நவல்பட்டு விஜி, தன்னோட தலைவர் விஜய் மேல இருக்குற பாசத்தை ஒரு வித்தியாசமான முறையில காட்டியிருக்காரு.
தலைவர் கூட போய் வேட்புமனு தாக்கல் பண்ணனும்னு அவருக்கு ஆசை, ஆனா விஜய் பிஸியா இருக்குறதால மனுஷன் ஒரு மாஸ் ஐடியா பண்ணிட்டாரு.
அப்படியே அச்சு அசலா விஜய் மாதிரியே ஒரு சிலையை செஞ்சு, அதை ஒரு வண்டியில தனக்கு பக்கத்துல நிக்க வச்சு ஊர்வலமா போய் வேட்புமனு தாக்கல் பண்ணிருக்காரு!
அந்தச் சிலையைத் துணியால மூடி வண்டியில ஏத்துற வீடியோ இப்போ இன்டர்நெட்ல செம வைரல். “என்ன ஒரு பாசம்!”னு ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் நெகிழ்ந்து போயிருக்காங்க.
ஆனா இன்னொரு பக்கம், “விஜய்க்கு பதிலா டூப் விஜய்யா? இனிமே இப்படித்தான் இருக்குமா?”னு மத்தவங்க கலாய்க்கவும் ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா நம்ம தளபதிக்கு இதெல்லாம் ஒன்னும் புதுசு இல்லையே!
ஒரு பக்கம் அரசியல் இப்படி இருக்க, இன்னொரு பக்கம் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் பத்தி ரசிகர்கள் செம டென்ஷன்ல இருக்காங்க. ஜனவரி 9-ஆம் தேதியே வர வேண்டிய படம், சென்சார் பிரச்சனையால தள்ளிப் போயிட்டே இருக்கு.
இப்போ இருக்குற டாக் படி, தேர்தல் முடிஞ்ச அடுத்த நாளே ‘ஜனநாயகன்’ திரைக்கு வரும்னு சொல்றாங்க.
அனில் ரவிபுடி இயக்கத்துல வந்த ‘பகவந்த் கேசரி’ படத்தோட ரீமேக்கான இந்தப் படத்துக்கு அரசியல் காரணங்களால சென்சார்ல முட்டுக்கட்டை விழுந்திருக்குதுதான் இப்போ இருக்குற ஹாட் நியூஸ்.
தேர்தல் களத்துல இந்தச் சிலை பாசம் ஒர்க் அவுட் ஆகுமா? இல்ல ‘ஜனநாயகன்’ படத்துக்கு இதுதான் ப்ரொமோஷனா? நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க! முழு விவரங்களுக்கு வீடியோவைப் பாருங்க!

