பாபநாசம் திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஏ .எம். ஷாஜகான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்…
தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாசிச பாஜகவை முறியடிக்க திமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றிபெற வேண்டும் என்பதில் வாக்காளர்கள் உறுதியாக உள்ளதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான்.
இன்று தளவாய்பாளையம், குளிச்சப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்..
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி , முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தியாக.சுரேஷ், அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


