சித்ரா லட்சுமணன் சொன்ன ரகசியம்! த்ரிஷாவின் வைரல் காட்டம்! பதிலடி!
தமிழ் சினிமாவுல 24 வருஷமா கொடிகட்டிப் பறக்குற ஒரே ஆளு நம்ம த்ரிஷா தான்!
இப்போ ‘விஸ்வம்பரா’, ‘ராம்’, ‘கருப்பு’ன்னு வரிசையா பெரிய படங்கள் இவங்க கைவசம் இருக்கு.
ஆனா, கடந்த சில நாட்களா சோஷியல் மீடியாவுல ஒரு குரூப், “த்ரிஷா சினிமாவுக்கு டாட்டா காட்டப்போறாங்க”ன்னு ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டுட்டாங்க.
பொதுவா வதந்திகளை கண்டுக்காம இருக்குற த்ரிஷா, இந்த முறை ரொம்பவே கடுப்பாகி தன்னோட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில ஒரு நக்கலான பதிவைப் போட்டிருக்காங்க.
அதுல அவங்க என்ன சொல்லிருக்காங்கன்னா:
“ஆமா.. நான் படங்களை எல்லாம் விட்டுட்டேன்.. ஒரு பெரிய பணக்கார பிசினஸ்மேனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நேத்து தான் ரெண்டாவது பிறந்தநாள் கொண்டாடுன நாலு குழந்தைகளுக்கு அம்மாவா அவங்களை வளர்த்துட்டு இருக்கேன்! இதுல இன்னும் ஏதாவது கதை சேர்க்கணுமா?
இல்ல உங்க கற்பனை அவ்ளோதானா?” அப்படின்னு ரொம்பவே நக்கலா கேட்டு, தன்னைப்பத்தி தப்பு தப்பா நியூஸ் பரப்புறவங்களுக்கு ஓப்பனா ஒரு பதிலடியைக் கொடுத்திருக்காங்க.
இந்த ஒரு போஸ்ட் மூலமா, “நான் இன்னும் ஃபீல்டுல தான் இருக்கேன், இப்போதைக்கு கல்யாணம், ரிடையர்மென்ட்னு எந்த பிளானும் இல்லை”ங்கிறதை த்ரிஷா தெளிவா சொல்லிட்டாங்க.
த்ரிஷாவோட இந்த ‘மாஸ்’ பதிலை அவங்களோட ரசிகர்கள் இப்போ கொண்டாடிட்டு வர்றாங்க.
“குந்தவைக்கு கோபம் வந்தா இப்படித்தான் இருக்கும்”னு நெட்டிசன்கள் கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. த்ரிஷாவோட இந்த அதிரடி பதில் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க!

