in

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பை அளித்த கிராம மக்கள்…

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பை அளித்த கிராம மக்கள்…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் போட்டியிடும்
பாமக வேட்பாளர் கணேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின் தொகுதிக்குட்பட்ட ஊரணிதாங்கல் அஞ்சாஞ்சேரி, நரசிங்கராயன்பேட்டை உள்ளிட்ட கிராமல் களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து பொன்பத்தி கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளர் கணேஷ்குமாருக்கு அப்பகுதி கிராம மக்கள்
பட்டாசு வெடித்தும் மலர்களை தூவியும்,ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

அப்போது பேசிய வேட்பாளர் கனேஷ்குமார் ஊரே திரண்டு
ஒன்று சேர்ந்து எனக்கு வரவேற்பு அளித்த இன் நிகழ்வை பார்க்கும் பொழுது மிகவும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னால் உங்களை பார்க்கும் பொழுது என்ன பேசுவது என்று தெரியவில்லை சென்ற 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் செலுத்தி வெற்றி பெற செய்தீர்கள் மீண்டும் தேர்தலில் நிற்கிறேன் மீண்டும் உங்களுக்கு சேவை செய்ய எனக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களியுங்கள் என கூறி பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

What do you think?

புதுச்சேரி…சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு…

திருக்குறுங்குடி ஸ்ரீ சுவாமி அழகிய நம்பிராயர் தேவஸ்தான திருக்கோவிலில் பங்குனி திருக்கல்யாணம்