in

திமுக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ மீண்டும் அறிவிக்கப்பட்டார்.

திமுக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ மீண்டும் அறிவிக்கப்பட்டார்.

திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ மீண்டும் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுகவினர் சாலவாக்கத்தில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…….

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் திமுக வேட்பாளர்களை திமுக தலைமை இன்று அறிவித்தது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ மீண்டும் அறிவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் ஊராட்சிக்கு வருகை தந்த திமுக வேட்பாளர் க.சுந்தர் சாலவாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், திமுக மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் சுந்தர் அவர்களுக்கு திமுக மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் குமார், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் மற்றும் திமுக சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

.

What do you think?

தளபதி விஜய் ஆசைப்பட்ட அந்த ஒரு ரோல்! அமைதிப்படை ரீ-ரிலீஸ்: -சத்யராஜ் சொன்ன சீக்ரெட் பேட்டி!