in

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

உலகப்புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் திருவிழாவிற்கான முக்கிய தேதிகள் உறுதிப்படுத்தப்பட்டன.

அந்த வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏப்ரல் 19ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 26 ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்.

ஏப்ரல் 27ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயம்.

ஏப்ரல் 28 : அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்.

ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் திரு தேரோட்டம்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்த அருள்வதற்காக ஏப்ரல் 29ஆம் தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடு.

ஏப்ரல் 30ஆம் தேதி எதிர்சேவை.

மே 1: சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான, அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள்.

வரக்கூடிய பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் , மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் , மாவட்ட காவல் எஸ்பி அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் வருவாய்த் துறையினர், மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அலுவலர்கள் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அலுவலர்கள் என பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு
லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், வரக்கூடிய பக்தர்கள் பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் , போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மாற்றங்கள் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக.

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பக்தர்களுக்கான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விழா நாட்களில் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் யாராக இருந்தாலும் பிரசாதம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு உணவு பாதுகாப்பு துறையிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

What do you think?

விக்னேஷ் உயிரிழப்புக்கு விஜய் தான் காரணமா? மீண்டும் விஜய்யை சீண்டிய ஜூலி!50-ஐ 500 ஆக்கிடாதீங்கண்ணே!

திருமணஞ்சேரி கல்யாண மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா 12 அடி நீள அலகை வாயில் குத்தி வேண்டுதல் காண்போரை பக்தி பரவசமடைய செய்தது:-