in

பவன் கல்யாண் Vs விஜயகுமார் ஐஏஎஸ்:நீதிமன்றத்தில் ஜெயித்தது யார்?அதிர வைக்கும் பின்னணி விவரங்கள்!

Watch – YouTube Click

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், தெலுங்கு சினிமாவோட ‘பவர் ஸ்டார்’ருமான பவன் கல்யாண், இப்போ சட்டரீதியாவும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெத்திருக்காரு.

“டெபுடி சிஎம் பதவியில இருந்துகிட்டு சினிமாவில் நடிக்கலாமா?”ன்னு கிளம்புன சர்ச்சைக்கு இப்போ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுடுச்சு!பவன் கல்யாண் துணை முதல்வரா இருக்கும்போதே ‘ஓஜி (OG)’, ‘ஹரி ஹர வீர மல்லு’ போன்ற படங்கள்ல நடிக்கிறது தப்புன்னு சொல்லி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் ஒரு மனுத் தாக்கல் செஞ்சிருந்தாரு.

அதுல ரெண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை வச்சாரு: ஒரு பெரிய பதவியில இருக்கிறவரு கமர்ஷியல் படங்கள்ல நடிக்கிறது தார்மீக ரீதியா தப்பு. பட புரமோஷனுக்கு அரசு இயந்திரத்தை (Government Machinery) தப்பா பயன்படுத்துறாரு.இந்த மனுவை விசாரிச்ச ஆந்திர ஹைகோர்ட், மனுதாரருக்கு செம நோஸ் கட் கொடுத்திருக்கு. நீதிபதி தன்னோட தீர்ப்புல ரொம்பத் தெளிவா சொல்லிட்டாரு:

“ஒரு அரசியல்வாதியோ இல்ல பொதுப்பணி செய்யுறவங்களோ சினிமாவுல நடிக்கக் கூடாதுன்னு எந்தச் சட்டமும் இல்லை !”

“அரசு இயந்திரத்தை தப்பா பயன்படுத்துனாருன்னு சொல்றதுக்கு எந்த ஆதாரமும் இல்லை!”

அதனால, இந்த மனுவை தள்ளுபடி செய்றதைத் தவிர வேற வழியே இல்லைன்னு சொல்லி வழக்கை முடிச்சு வச்சுட்டாங்க.இந்தத் தீர்ப்பு வந்ததும் ஆந்திராவுல இருக்குற பவன் கல்யாண் ரசிகர்கள் செம குஷியாகிட்டாங்க.

ஏற்கனவே 2024 தேர்தல்ல மாஸ் வெற்றி பெத்த பவன் கல்யாண், இப்போ தயாரிப்பாளர்களோட நஷ்டத்தை மனசுல வச்சுக்கிட்டு மீதி இருக்குற படங்களை முடிச்சுக்கொடுக்கப் போறாரு. ‘ஹரி ஹர வீர மல்லு’ – பிரம்மாண்ட பீரியட் படம். ‘ஓஜி (OG)’ – 350 கோடிக்கு மேல வசூலிச்ச பிளாக்பஸ்டர்.

அடுத்ததா சுரேந்தர் ரெட்டி இயக்கத்துல ஒரு பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படத்துலயும் நடிக்கப் போறாராம்!இந்தத் தீர்ப்பு இப்போ இந்தியா முழுக்க ஒரு விவாதத்தைக் கிளப்பிருக்கு.

“அரசியல்வாதி முழு நேரமும் மக்களுக்குத் தான் உழைக்கணும்”னு ஒரு தரப்பும், “நடிக்கிறது அவங்களோட தனிப்பட்ட உரிமை, கலைச் சுதந்திரம் “னு இன்னொரு தரப்பும் பேசிட்டு வர்றாங்க. எது எப்படியோ, பவன் கல்யாண் இப்போ டபுள் குஷியில இருக்காரு.

அரசியல்லயும் கெத்து காட்டிட்டு, சினிமாவிலயும் தன்னோட ஸ்டைலைத் தொடரப்போறாரு. அவரோட ரசிகர்கள் சொல்ற மாதிரி, “பவர் ஸ்டாரை இனி யாரும் தடுக்க முடியாது!”

What do you think?

கீழ்வேளூர் அருகே திருமண சீர்வரிசை ஏற்றி சென்ற டாட்டா ஏசி வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆபத்தான பயணம்:

விக்னேஷ் உயிரிழப்புக்கு விஜய் தான் காரணமா? மீண்டும் விஜய்யை சீண்டிய ஜூலி!50-ஐ 500 ஆக்கிடாதீங்கண்ணே!