in

மாநில அளவில் நடைபெற குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை சாய் மாணவிகள் சாதனை.

மாநில அளவில் நடைபெற குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை சாய் மாணவிகள் சாதனை.

தமிழ்நாடு குத்து சண்டை கழக தலைவர் பொன் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்டம் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவிகள்.

புவன்ஸா,விகாஷினி,ரித்திகாஸ்ரீ,ஆகியோர் ஜூனியர் பிரிவில் விளையாடி தங்கப் பதக்கமும் மற்றும் லக்கிமா என்ற மாணவி வெண்கல பதக்கமும் பெற்றனர். மேலும் இப்போ போட்டியில் தங்கம் வென்றவர்கள் நாக்பூரில் நடக்கவுள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

மேலும் சப் ஜூனியர் பிரிவில் மயிலாடுதுறை மாவட்டம் இந்திய விளையாட்டு மேம்பாட்டு பயிற்சி மையத்திலன் மாணவி தீபா கடந்த 20 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான தகுதி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று.

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார் மேலும் இந்த போட்டியானது ஆசிய சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டி தகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அளவில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்சி மைய பொறுப்பாளர் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளரான பச்சையப்பன் மற்றும் குத்து சண்டை பயிற்சியாளர் சஜேஷ் பாராட்டி மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

What do you think?

ஊராட்சி மன்ற தலைவர் & நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் களக்காட்டூரில்  தொடர் விபத்துகள் 

புதிய ஹீரோக்களுடன் ‘ஹாரி பாட்டர்’வெப் தொடர் டீசர் வெளியீடு! மிரட்டும் புதிய டீசர்!