in

மீண்டும் மீண்டும்:”என் இதயம் பலமுறை உடையுது!” த்ரிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ! மெர்சலான ரசிகர்கள்!

Watch – YouTube Click

தமிழ் சினிமாவோட எவர்-க்ரீன் குயின் த்ரிஷாவுக்கு நாய்கள்னா எவ்வளவு உசுருன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். இப்போ அவங்க இன்ஸ்டா ஸ்டோரியில போட்டிருக்கிற ரெண்டு வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவுல செம வைரல்!

த்ரிஷா முதல்ல ‘ஜோரோ’ அப்படிங்கிற நாய்க்குட்டியைத் தான் தன் சொந்த மகன் மாதிரியே வளர்த்து வந்தாங்க. ஆனா, போன 2024 டிசம்பர் 25-ம் தேதி ஜோரோ இறந்து போயிட்டான்.

“என் மகனே போயிட்டான், இனி என் வாழ்க்கையில அர்த்தமே இல்லை”னு சொல்லி த்ரிஷா அப்படியே உடைஞ்சு போயிட்டாங்க. ரொம்ப நாள் ஜோரோவோட நினைப்புலயே சோகமான போஸ்ட்களைப் போட்டுட்டு இருந்தாங்க.

அந்தச் சோகத்துல இருந்து மீண்டு வர, போன மாசம் (2.2.2025) ‘இஸ்ஸி’ அப்படிங்கிற நாய்க்குட்டியைத் தத்தெடுத்து மகளா வளர்க்க ஆரம்பிச்சாங்க. இப்போ இஸ்ஸி கிருஷ்ணனும் இன்ஸ்டாகிராம்ல பெரிய பிரபலம் தான்!

இஸ்ஸியை குளிக்க வைக்கிறது, அவகூட விளையாடுறதுன்னு த்ரிஷா இப்போ கொஞ்சம் கொஞ்சமா பழைய சந்தோஷத்துக்குத் திரும்பியிருக்காங்க.ஆனா, த்ரிஷா இப்போ ஷேர் செஞ்ச ஒரு வீடியோ தான் எல்லாரையும் ஃபீல் பண்ண வச்சிருக்கு.

அதுல ஒருத்தர் பேசுறாரு, நாய் வளர்க்கிறவங்க ரொம்ப துரதிஷ்டசாலிகள்.. ஏன்னா, தங்களோட பெஸ்ட் பிரெண்ட்ஸை சீக்கிரமே இழக்கப்போறோம்னு தெரிஞ்சே அவங்களை வளர்க்குறாங்க.

நாய் இறந்து மனசு உடையும்னு தெரிஞ்சும், மறுபடியும் இன்னொரு நாயை எடுத்து வளர்க்குறாங்க.

அந்த வாயில்லா ஜீவன்கள் சாகுறதுக்கு முன்னாடி சொர்க்கம் எப்படி இருக்கும்னு காட்டுறதுக்காகவே, இந்த மனுஷங்க தங்களோட இதயத்தை பலமுறை உடைச்சுக்குறாங் அப்படின்னு அந்த வீடியோவுல இருக்கு.

ஜோரோ போன இடத்துல இப்போ இஸ்ஸிக்கு ராஜ வாழ்க்கை தான்! அவளுக்குன்னு தனி பெட், பொம்மைகள், பிராம் (Pram)னு த்ரிஷா அவளைத் தங்கமா பார்த்துக்கிறாங்க.

இதைப்பார்க்குற நெட்டிசன்கள், “வாழ்க்கையில பிறந்தா த்ரிஷாவோட செல்ல நாயா பிறக்கணும்ப்பா!”ன்னு ஜாலியா சொல்லிட்டு வர்றாங்க.

என்னதான் இஸ்ஸி கூட சந்தோஷமா இருந்தாலும், மகன் ஜோரோவை த்ரிஷா இன்னமும் மறக்கலைங்கிறது தான் நிஜம்!இதைப்பார்த்த ரசிகர்கள், “நிஜமாவே த்ரிஷா இப்போ இஸ்ஸியை அப்படித்தான் பார்த்துக்கிறாங்க”ன்னு கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க.

What do you think?

மயிலம் ஸ்ரீ முருகன் கோயில் பங்குனி உத்திர விழா

மதுரவாயலில் 1 கொடியை 13 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பரிமுதல்