பாலிவுட்ல இப்போ ரன்வீர் சிங்கோட ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) படம் தான் பாக்ஸ் ஆபீஸ்ல பயங்கரமா ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. ஆதித்யா தர் டைரக்ஷன்ல ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணானு ஒரு பெரிய ஸ்டார் பட்டாளமே நடிச்சிருக்காங்க.
நேத்து (மார்ச் 19) ரிலீஸான இந்தப் படம், ரிலீஸுக்கு முன்னாடியே அட்வான்ஸ் புக்கிங்ல கோடிகளைக் குவிச்சது.
இப்போ கிடைச்சிருக்க தகவல்படி, உலகளவுல ப்ரீமியர் ஷோவுல மட்டும் 52.71 கோடி ரூபாய் வசூல் பண்ணி சாதனை படைச்சிருக்கு.
இன்னைக்கு காலையில முதல் காட்சியிலேயே 17 கோடிக்கு மேல வசூலாகியிருக்காம். இதைப் பார்த்தா, கண்டிப்பா முதல் நாள் வசூல் 100 கோடியைத் தாண்டும்னு சினிமா டிராக்கர்ஸ் சொல்றாங்க!
முதல் நாளே வசூல்ல மிரட்டியிருக்கு!படம் ரிலீஸான முதல் நாளே இந்தியா முழுக்க சுமார் 100.23 கோடி ரூபாய் வசூல் செஞ்சிருக்கு. இதுல ஹிந்தி பெல்ட்ல மட்டும் 96 கோடிக்கு மேல வசூலாகியிருக்கு.
இதுபோக ப்ரீமியர் ஷோ மூலமா ஒரு 43 கோடி வந்திருக்கு. மொத்தமா பார்த்தா, இந்தியாவில மட்டும் முதல் நாள்ல 143 கோடி ரூபாய் வசூல்! இது நம்ம அஜித்தோட ‘விடாமுயற்சி’ படத்தோட மொத்த வசூலை விட அதிகம்னு சொல்றாங்க.
ஆனா இவ்வளவு பெரிய வசூல் செஞ்சும், இந்தியாவோட டாப் 3 ஓப்பனிங் லிஸ்ட்ல இந்தப் படத்தால நுழைய முடியல. இப்போ வரைக்கும் இந்தியாவோட டாப் 3 ‘பாக்ஸ் ஆபீஸ் கிங்’ யார் யார் தெரியுமா?
இப்போ வரைக்கும் யாராலயும் அசைக்க முடியாத இடத்துல இருக்குறது நம்ம அல்லு அர்ஜுனோட ‘புஷ்பா 2’ தான்.
முதல் நாளே இந்தியா முழுக்க 164 கோடி ரூபாய் வசூல் செஞ்சு மெகா ரெக்கார்ட் படைச்சிருக்கு. அடுத்ததா ராஜமௌலி – ராம் சரண் – என்.டி.ஆர் கூட்டணியில வந்த ‘RRR’ படம்.
முதல் நாள்ல சுமார் 133 கோடி ரூபாய் வசூல் செஞ்சு ரெண்டாவது இடத்துல கெத்தா நிக்குது.மூணாவது இடத்துல நம்ம ராக்கி பாய் யாஷ் நடிச்ச ‘KGF 2’ இருக்கு.
கன்னடப் படமான இது முதல் நாள்ல இந்தியா முழுக்க 116 கோடி ரூபாய் அள்ளியது.நாலாவது இடத்துல இப்போ வந்த ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ (100 கோடி) இருக்கு. அஞ்சாவது இடத்துல பிரபாஸ், கமல் நடிச்ச ‘கல்கி 2898 AD’ (95 கோடி) இருக்கு. ‘துரந்தர்’ முதல் பாகம் வந்தப்போ முதல் நாள்ல வெறும் 28 கோடி தான் வசூல் ஆச்சு.
ஆனா இந்த ரெண்டாவது பாகம் அதைவிட 4 மடங்கு அதிகமா வசூல் செஞ்சு ரன்வீர் சிங்குக்கு ஒரு பெரிய கம்-பேக் கொடுத்திருக்கு!
‘துரந்தர்’ முதல் பாகம் ரிலீஸானப்போ, அதுல முஸ்லிம்களைத் தப்பா காட்டியிருக்காங்கன்னும், இது ஒரு குறிப்பிட்ட அரசியல் பக்கத்தைக் கொண்ட படம்ன்னும் பெரிய விமர்சனம் எழுந்தது.
ஆனா அந்த சர்ச்சைகளையும் தாண்டி படம் 1350 கோடி ரூபாய்க்கு மேல வசூல் செஞ்சு மெகா ஹிட் ஆச்சு. இப்போ அதோட ரெண்டாம் பாகமும் அதே அதிரடியோட வந்திருக்கு.
வட மாநிலங்கள்ல படம் பட்டையைக் கிளப்புனாலும், தென்னிந்தியாவுல குறிப்பா தமிழ்நாட்டுல ஒரு சின்ன வருத்தம். இந்தப் படத்தை தமிழ்ல ரிலீஸ் பண்றதுல சில சிக்கல்கள் ஏற்பட்டதுனால, பல இடங்கள்ல காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கு.
இதனால தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்ல இருக்காங்க. சர்ச்சைகளைக் கடந்து ரன்வீர் சிங் இந்தப் படத்துல ஒரு பெரிய வசூல் வேட்டையை ஆரம்பிச்சுட்டாருன்னே சொல்லலாம்!

